சாத்தான்குளம் அருகேமோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி படுகாயம்


சாத்தான்குளம் அருகேமோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி படுகாயம்
x
தினத்தந்தி 9 Aug 2023 12:15 AM IST (Updated: 9 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் முதலூர் ரோடு நாடார் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் தங்கராஜ் பிரதீப் (வயது 26). தொழிலாளி. இவரது மனைவி கிப்ட்ளின் கிருபா. நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் அவரது தாயார் ஊரான சாலைப்புதூரில் உள்ளார். இந்நிலையில் கடந்த 3-ந்தேதி மனைவியை பார்ப்பதற்காக தங்கராஜ் பிரதீப் தனது மோட்டார் சைக்கிளில் சாலைப்புதூருக்கு புறப்பட்டு சென்றார். செட்டிகுளத்தில் இருந்து இளமான்குளம் இடையே சென்றபோது எதிரே வந்த கார், அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து தங்கராஜ் பிரதீப் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story