சாத்தான்குளம் அருகே தொழிலாளி கொலையில் மேலும் ஒருவர் கைது
சாத்தான்குளம் அருகே தொழிலாளி கொலையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளி கொலை
சாத்தான்குளம் அருகே பள்ளங்கிணறைச் சேர்ந்த பட்டுராஜ் மகன் ரேவந்த்குமார் (27). இவர் சென்னையில் ஒரு இரும்புக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். தசரா திருவிழாவை யொட்டி சொந்தஊர் வந்த அவர் கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் செட்டிகுளத்தை அடுத்த நொச்சிகுளம் விலக்கில் பஸ்நிலையம் பின்புறம் உள்ள கல்லறை தோட்டத்தில் கழுத்து மற்றும் கையில் வெட்டுப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலைவழக்கு குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு நடத்திய விசாரணையில், அவரை, அதே ஊரைச் சேர்ந்த சாமுவேல் மகன் சித்திரை ஜெகன் என்ற ஜெகன் (35), அவரது தம்பி சுடலை (34) மற்றும் உறவினர் ஆறுமுகம் மகன் முத்துசாமி (40) ஆகிய 3 பேரும் கொலை செய்தது தெரிய வந்தது. மேலும், தசராவிழா மற்றும் கடந்த 2018-ம்ஆண்டு ரேவந்த்குமாாின் சித்தப்பா கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இந்த கொலை நடந்துள்ளதும் தெரியவந்தது.
வாலிபர் சிக்கினார்
இதை தொடர்ந்து முத்துசாமியை போலீசார் கைது செய்த நிலையில,் சித்திரை ஜெகன் நாங்குநேரி கோர்ட்டில் சரண் அடைந்தார். சுடலை தலைமறைவாக இருந்தார். சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் உத்தரவின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் தலைமையிலான போலீசார், சுடலையை தேடி வந்தனர்.லையில் செட்டிகுளம் பகுதியில் பதுங்கியிருந்த சுடலையை போலீசார் நேற்று கைது செய்து சாத்தான்குளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.