சாத்தான்குளம் அருகே தொழிலாளிக்கு மதுபாட்டில் குத்து


சாத்தான்குளம் அருகே தொழிலாளிக்கு மதுபாட்டில் குத்து
x
தினத்தந்தி 20 July 2023 12:15 AM IST (Updated: 20 July 2023 4:26 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே தொழிலாளிக்கு மதுபாட்டிலால் குத்தப்பட்டார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே உள்ள கீழகருங்கடல் வடக்கு தெருவை் சேர்ந்த ஆனந்தகுமார் மகன் ரமேஷ் (வயது 25). தொழிலாளியான இவரும், கீழபுளியங்குளம் சுந்தர்ராஜ் மகன் நயினார், அந்தோணி மகன் அகஸ்டின் ஆகியோரும் நண்பர்கள். இந்த 3பேரும் சம்பவத்தன்று ஊருக்கு அருகிலுள்ள சுடலை கோவில் பகுதியில் மது குடித்தனர். அப்போது தசரா விழா தொடர்பாக அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நயினார், அகஸ்டின் இருவரும் மது பாட்டிலை உடைத்து ரமேஷ் வயிற்றில் குத்தினர். பின்னர் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு 2 பேரும் தலைமறைவாகி விட்டனர். இதில் காயமடைந்த ரமேஷ் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அகஸ்டினை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள நயினாரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story