சாத்தான்குளம் அருகேகிணற்றில் தவறிவிழுந்த தொழிலாளி:தீயணைப்பு துறையினர் மீ்ட்டனர்


சாத்தான்குளம் அருகேகிணற்றில் தவறிவிழுந்த தொழிலாளி:தீயணைப்பு துறையினர் மீ்ட்டனர்
x
தினத்தந்தி 14 Aug 2023 12:15 AM IST (Updated: 14 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறிவிழுந்த தொழிலாளியை தீயணைப்பு துறையினர் மீ்ட்டனர்

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம்  அருகே தோப்புவளத்தைச் சேர்ந்த சக்திக்கனி என்பவரது தோட்டத்தில் 80 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. இதில் தண்ணீர் குறைந்ததால், அந்த கிணற்றை தூர்வாறுவது குறித்து அறிய சாத்தான்குளம் சொக்கலிங்கபுரம் காலனியைச் சேர்ந்த ராஜாமணி (வயது 60) உள்ளிட்ட 3 பேர் கயிறு கட்டி இறங்கினர். அப்போது நிலைதடுமாறி ராஜாமணி கிணற்றில் தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் கிணற்று தண்ணீரில் தத்தளித்தார். உடன் சென்ற 2 பேரும் பாதுகாப்பாக மேலவந்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் வீரர்கள் சதீஷ்குமார், சுரேஷ்குமார், சுப்பிரமணியன், முத்து மாரியப்பன், துரை சீனிவாசன் ஆகியோர் விரைந்து ெசன்று கிணற்றுக்குள் காயங்களுடன் தத்தளித்து கொண்டிருந்த ராஜாமணியை பாதுகாப்பாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story