சத்தியமங்கலம் அருகே, பள்ளிக்கூடத்துக்கு மது குடித்துவிட்டு வந்த தலைமை ஆசிரியர் இடமாற்றம்
தலைமை ஆசிரியர் இடமாற்றம்
ஈரோடு
சத்தியமங்கலத்தை அடுத்த அனுப்பர்பாளையத்தில் அரசு தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர் ஒருவர் பணியின்போது மது குடித்துவிட்டு வந்து பாடம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள், தலைமை ஆசிரியர் மீது குற்றம் சாட்டியதுடன், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதுகுறித்து வட்டார கல்வி அதிகாரி சரவணன் விசாரணை நடத்தி வந்தார். இந்த நிைலயில் அனுப்பர்பாளையம் தலைமை ஆசிரியர், சத்தியமங்கலம் அருகே கணபதி நகரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கூடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
Related Tags :
Next Story