சத்தியமங்கலம் அருகே திம்மராய பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை


சத்தியமங்கலம் அருகே  திம்மராய பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
x

சத்தியமங்கலம் அருகே திம்மராய பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகப்புதூர் ஊராட்சிக்கு உள்பட்ட குந்தி பொம்மலூரில் பிரசித்தி பெற்ற திம்மராய பெருமாள் கோவில் உள்ளது. புரட்டாசி சனிக்கிழமையையொட்டி நேற்று முன்தினம் ஆண் மற்றும் பெண் பக்தர்கள் என ஏராளமானோர் தீர்த்தக்குடம் எடுத்து கோவிலுக்கு வந்தனர். இதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இரவில் சாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

பின்னர் நேற்று அதிகாலை திம்மராய பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து சாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story