சத்தி அருகே விஷம் குடித்து வியாபாரி தற்கொலை
வியாபாரி தற்கொலை
சத்தியமங்கலம் அருகே உள்ள ராம பையலூரைச் சேர்ந்தவர் ஷேக் தாவூத் (வயது 53). ஆட்டோ டிரைவரான இவர் மாடுகளை வாங்கி விற்கும் வியாபாரமும் செய்து வந்தார். இவர் வியாபாரம் விஷயமாக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை என்று கூறி தன்னுடைய மனைவி ஷஜாதியிடம் அடிக்கடி புலம்பி வந்துள்ளார். அவருக்கு மனைவி ஆறுதல் கூறி வந்தார். எனினும் ஷேக் தாவூத் மனமுடைந்து காணப்பட்டு வந்தார்.
சம்பவத்தன்று ஷஜாதி பூப்பறிக்க அருகில் உள்ள தோட்டத்துக்கு சென்று விட்டார். ஷேக் தாவூத்தும் தன்னுடைய வியாபாரத்துக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். இந்த நிலையில் கொழிஞ்சானூரில் உள்ள குளத்து மேட்டில் ஷேக் தாவூத் மயங்கி கிடப்பதாக ஷஜாதிக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அவர் அங்கு சென்று பார்த்தபோது ஷேக் தாவூத் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஷேக் தாவூத் இறந்தார். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
----