சங்கராபுரம் அருகேவெங்காய சாகுபடி குறித்த பயிற்சி
சங்கராபுரம் அருகே வெங்காய சாகுபடி குறித்த பயிற்சி நடைபெற்றது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தில் வெங்காய சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது. இதற்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சத்யராஜ் தலைமை தாங்கினார். தோட்டக்கலை உதவி அலுவலர் பாக்யராஜ், தேவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி அலுவலர் ராமச்சந்திரன் வரவேற்றார். வேளாண்மை அறிவியல் நிலைய தோட்டகலை ஆராய்ச்சியாளர் முனைவர் ஷர்மிளாதேவி கலந்து கொண்டு, சங்கராபுரம் வட்டாரத்தில் அரசம்பட்டு பூட்டை, பாவளம், கொசப்பாடி, மல்லாபுரம் ஆகிய கிராமங்களில் வெங்காயம் அதிக அளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தொடர் மழை காரணமாக கோழிக்கால் நோய் ஏற்பட்டதால், வெங்காய சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. மீண்டும் வெங்காய சாகுபடி பரப்பு அதிகரிக்கவும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மூலமாக கோழிக்கால் நோயை கட்டுப்படுத்தவும், விதை மூலம் நாற்றங்கால் அமைத்து வெங்காயம் சாகுபடி செய்திட செயல் விளக்கத்தின் மூலமாகவும், நவீன முறையில் வெங்காய சாகுபடி முறைகள் குறித்து பயிற்சி அளித்தார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.