சிறுத்தொண்டநல்லூர் அருகே வாய்க்காலில் வாலிபர் பிணம்
சிறுத்தொண்டநல்லூர் அருகே வாய்க்காலில் வாலிபர் பிணத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி
ஏரல்:
ஏரல் அடுத்து உள்ள சிறுத்தொண்டநல்லூர் பெருங்குளம் மறுகால் வாய்க்கால் தண்ணீரில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக நேற்று சிறுத்தொண்டநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி கற்பக சிவஜோதி ஏரல் போலீசில் புகார் செய்தார். போலீசார் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனப்பி வைத்தனர். அவர் கருப்பு கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்தார். அவரது கைகளில் பிரியா, பாலை என பச்சை குத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார் அவர்? இறந்தது எப்படி? என விசாரணை நடத்தி வருகிறார்.னர்.
Related Tags :
Next Story