சிவகிரி அருகேமோட்டார்சைக்கிளை திருடிய வாலிபரை துரத்தி பிடித்த பொதுமக்கள்


சிவகிரி அருகேமோட்டார்சைக்கிளை திருடிய வாலிபரை துரத்தி பிடித்த பொதுமக்கள்
x

சிவகிரி அருகே மோட்டார்சைக்கிளை திருடிய வாலிபரை பொதுமக்கள் துரத்தி பிடித்தனா்

ஈரோடு

சிவகிரி அருகே உள்ள சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் கோகுல்ராஜ் (வயது 29). மரக்கடை உரிமையாளர். இவர் தனது மரக்கடை முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு, அதன் சாவியை எடுத்துக்கொண்டு கடையின் உள்ளே சென்றாா். சிறிது நேரம் கழித்து அந்த வழியாக வந்த நபர் ஒருவர் கோகுல்ராஜின் மோட்டார்சைக்கிளை நைசாக எடுத்து கொண்டு சென்றார். இதை கண்டதும் மரக்கடையில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் சத்தம் போட்டனர். அவர்களுடைய சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் அந்த நபரை துரத்தினர். சாவி இல்லாததால் அவர் மோட்டார்சைக்கிளை வேகமாக உருட்டி சென்றார். ஆனால் முடியவில்லை. இதனால் மோட்டார்சைக்கிளை அப்படியே கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினார். எனினும் அந்த நபரை பொதுமக்கள் துரத்தி சென்று பிடித்து சிவகிரி போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 'அவர் கரூர் மாவட்டம் வயலூரை சேர்ந்த கார்த்திக் (21) என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர்.


Next Story