ஸ்ரீீவைகுண்டம் அருகே வாழை தோட்டத்தில் திடீர் தீ விபத்து


ஸ்ரீீவைகுண்டம் அருகே வாழை தோட்டத்தில் திடீர் தீ விபத்து
x
தினத்தந்தி 15 July 2023 12:15 AM IST (Updated: 16 July 2023 3:00 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீீவைகுண்டம் அருகே வாழை தோட்டத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பொன்னங்குறிச்சியில் நெல்லை- திருச்செந்தூர் சாலை ஓரத்தில் உள்ள வாழைத் தோட்டத்தில் திடீரென தீ பிடித்தது. இந்த தீ வாழைகளில் பற்றி எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்தவுடன் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் இசக்கி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மந்திரமூர்த்தி, சங்கரநாராயணன், முருகன், பார்வதி முத்து உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டதால் அருகில் உள்ள தோட்டத்திலும் தீ பரவியது. சுமார் ஒரு மணிநேரம் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதுமே புகை மூட்டமாக காணப்பட்டது. இதைப்போல், தூதுகுழி குளத்தின் கரையோரப் பகுதியில் ஏற்பட்ட தீயையும் தீயணைப்பு துறையினர் அணைத்தனர். தீ விபத்தால் பாதிக்கப்பட்ட தோட்டங்களை தாசில்தார் சிவக்குமார் நேரில் பார்வையிட்டார். தீயில் கருகிய வாழைகளை கணக்கெடுக்கும் பணிகளை வருவாய் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story