ஸ்ரீவைகுண்டம் அருகே விவசாயிகளுக்கு பயிற்சி முகாம


ஸ்ரீவைகுண்டம் அருகே  விவசாயிகளுக்கு பயிற்சி முகாம
x
தினத்தந்தி 29 Oct 2022 12:15 AM IST (Updated: 29 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் அருகே விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேரூர் கிராமத்தில் அட்மா திட்டத்தின் சார்பில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இப்பயிற்சிக்கு தொழிநுட்ப பயிர்பாதுகாப்பு அலுவலர் முத்துகுமார் தலைமை தாங்கி, பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் விதை நேர்த்தி நாற்றாங்கால் பராமரிப்பு நன்மை செய்யும், தீமை செய்யும் பூச்சிகளை இனம் காண்பது மேலும் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் பூச்சிகளை கட்டுபடுத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பங்கள் பற்றியும் விரிவாக பறிற்சி அளித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் வனஜா துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பயிற்சி அளித்தார்.

இப்பயிற்சியில் பல்வேறு விவசாயிகள் ஆர்வமாக கலந்து கொண்டு தங்களது சந்தேகங்களை கேட்டறிந்தனர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் இசக்கிராணி, உதவி தொழில்நுட்ப மேலாளர் ஆனந்தி ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story