சிறுபாக்கம் அருகே கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை பலி


சிறுபாக்கம் அருகே  கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை பலி
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிறுபாக்கம் அருகே கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை உயிரிழந்தது.

கடலூர்

சிறுபாக்கம்,

சிறுபாக்கம் அடுத்த மங்களூரை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 30). இவருடைய மனைவி சங்கீதா(26). இவர்களுக்கு 3 வயதில் ரிஷ்மிதா என்ற மகள் இருந்தாள். நேற்று காலையில் சங்கீதா தனது மகள் மற்றும் மாமனார், மாமியாருடன் அதே பகுதியில் உள்ள வயலுக்கு சென்றார். அப்போது குழந்தையை மட்டும் அருகில் உள்ள இடத்தில் செல்போனை கொடுத்து உட்கார வைத்து விட்டு மற்ற 3 பேரும் வயலில் இறங்கி வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

கிணற்றில் தவறி விழுந்தது

இந்த நிலையில் குழந்தை ரிஷ்மிதா, செல்போனில் விளையாடிக்கொண்டே அருகில் இருந்த 20 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த சங்கீதா மற்றும் அவருடைய மாமனார், மாமியார் அக்கம்பக்கத்தினருடன், கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர்களால் முடியவில்லை.

உடல் மீட்பு

பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி தேடினர். சுமார் 2 மணி நேரம் தேடுதலுக்கு பின்னர் ரிஷ்மிதா பிணமாக மீட்கப்பட்டாள். இதைபார்த்த தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதையடுத்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிறுபாக்கம் போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story