தாளவாடி அருகே கூண்டில் சிக்கிய சிறுத்தை பவானிசாகர் வனப்பகுதியில் விடப்பட்டது


தாளவாடி அருகே   கூண்டில் சிக்கிய சிறுத்தை பவானிசாகர் வனப்பகுதியில் விடப்பட்டது
x

கூண்டில் சிக்கிய சிறுத்தை

ஈரோடு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப்பகுதி தாளவாடி. கடந்த 8 மாதங்களாக இந்த வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று வெளியேறி தாளவாடியை அடுத்த தொட்டகாஜனூர், சூசைபுரம், பீம்ராஜ்நகர் கிராமங்களுக்குள் புகுந்து 25-க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் மாடுகள், 15-க்கும் மேற்பட்ட வேட்ைடயாடி உள்ளது. இதைத்ெதாடர்ந்து தாளவாடியை அடுத்த ஓசூர் கல்குவாரியில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர். இதில் சிறுத்தை வசமாக சிக்கி கொண்டது. இதையடுத்து சிறுத்தையை மற்றொரு கூண்டுக்கு வனத்துறையினர் மாற்றும்போது அதில் இருந்து தப்பி ஓடியது. ஏற்கனவே சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி இருந்ததால், கல்குவாரி பகுதியில் அது மயங்கி கிடந்தது. பின்னர் அந்த சிறுத்தையை பிடித்து மீண்டும் கூண்டில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து அந்த சிறுத்தை நேற்று முன்தினம் இரவில் பவானிசாகர் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கு வைத்து கூண்டை வனத்துறையினர் திறந்துவிட்டனர். உடனே கூண்டில் இருந்து சிறுத்தை சீறிப்பாய்ந்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

---


Next Story