தாளவாடி அருகே காரில் கடத்திய 480 கர்நாடக மது பாக்கெட் பறிமுதல்தப்பி ஓடியவருக்கு வலைவீச்சு
தப்பி ஓடியவருக்கு வலைவீச்சு
தாளவாடியை அடுத்த சிமிட்டஹள்ளி பகுதியில் தாளவாடி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை கண்டதும், காரில் வந்தவர், சிறிது தூரத்தில் அதை அப்படியே நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். உடனே போலீசார் விரைந்து சென்று காரின் கதவை திறந்து பார்த்தனர். அப்போது காரில் அட்டை பெட்டிகளில் 480 கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் இருந்ததை கண்டனர். இதைத்தொடர்ந்து மது பாக்கெட் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 'சிமிட்டஹள்ளியை சேர்ந்த சிவமல்லூ (வயது 42) என்பவர் தாளவாடி பகுதிகளில் விற்பனை செய்வதற்காக கர்நாடக மாநிலத்தில் இருந்து மது பாக்கெட்டுகளை கடத்தி வந்தது,' தெரியவந்தது. இதையடுத்து சிவமல்லூவை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.