தாளவாடி அருகே ஏரிக்கரையில் படுத்திருந்த புலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பு
புலி
தாளவாடி அருகே ஏரிக்கரையில் புலி படுத்திருக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
எண்ணிக்கை உயர்வு
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு மான், யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தற்போது சிறுத்தை மற்றும் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக வனத்துறையினர் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
ஏரிக்கரையில் புலி
இந்தநிலையில் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட பவுத்தூர் அருகே உள்ள ஒரு ஏரி பகுதிக்கு சிலர் சென்றனர். அப்போது மறுகரையில் புலி ஒன்று படுத்து கிடப்பதை பார்த்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்தனர். உடனே புலியை தங்களது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். தற்போது இந்த காட்சி வாட்ஸ்- அப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் ஏரி பகுதியில் புலி நடமாட்டம் உள்ளதாக உலா வரும் காட்சியால் அந்த பகுதி கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.