தாளவாடி அருகே மர்ம விலங்கு கடித்து நாய் பலி


தாளவாடி அருகே   மர்ம விலங்கு கடித்து நாய் பலி
x

நாய் பலி

ஈரோடு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு புலி, சிறுத்தை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் அவ்வப்போது விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதும் கால்நடைகளை வேட்டையாடி வருவதும் தொடர்கதை ஆகி வருகிறது. சில நேரம் கால்நடைகளையும், மனிதர்களையும் தாக்கி கொன்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை ஜுர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட திகினாரையை அடுத்த ரங்கசாமி கோவில் அருகே விவசாயிகள் சென்றனர். அப்போது அங்கு நாய் ஒன்று இறந்து கிடந்தது. ஏதோ ஒரு மர்மவிலங்கு கடித்து நாய் இறந்தது தெரியவந்தது. தோட்ட பகுதி என்பதால் விலங்கின் கால்தடம் தெரியவில்லை. உடனே இதுபற்றி ஜுர்கள்ளி வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் காவல் நாய் ஒன்று மர்ம விலங்கு கடித்து உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கது. வனப்பகுதியில் இருந்து வந்த புலி அல்லது சிறுத்தை காவல் நாயை வேட்டையாடி இருக்கலாம் என விவசாயிகள் கருதுகின்றனர். இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.


Next Story