தாளவாடி அருகே சாலையை குட்டிகளுடன் கடந்து சென்ற யானைகள்வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை


தாளவாடி அருகே சாலையை குட்டிகளுடன் கடந்து சென்ற யானைகள்வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை
x

தாளவாடி அருகே சாலையை குட்டிகளுடன் யானைகள் கடந்து சென்றன

ஈரோடு

தாளவாடி அருகே சாலையை குட்டிகளுடன் யானைகள் கடந்து சென்றன. எனவே வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வனச்சாலைக்கு வந்த யானைகள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட 10 வனச்சரகங்களில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இங்கிருந்து வெளியேறும் வனவிலங்குகள் குறிப்பாக யானை போன்ற விலங்குகள் தாளவாடி-தலமலை வனச்சாலையை அடிக்கடி கடந்து செல்வது வழக்கமான ஒன்று.

இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணி அளவில் தாளவாடி வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் யானைகள் வெளியேறின. பின்னர் அவை சிக்கள்ளி அருகே உள்ள வனச்சாலைக்கு வந்தன.

கூட்டமாக கடந்து சென்றன

அதைத்தொடர்ந்து குட்டிகளுடன் யானைகள் கூட்டமாக ரோட்டை கடந்து சென்றன. அப்போது அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் யானைகளை பார்த்ததும் சற்று தூரத்திலேயே தங்கள் வாகனங்களை நிறுத்திக்கொண்டனர். ஒரு சிலர் யானைகளை தங்கள் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யானைகள் ரோட்டை கடந்து சென்றதும் வாகனங்கள் அங்கிருந்து சென்றன.

இதுபற்றி வனத்துறையினர் கூறும்போது, 'வனவிலங்குகள் உணவு, தண்ணீருக்காக அடிக்கடி வனப்பகுதி சாலையை கடந்து செல்கின்றன. எனவே வாகன ஓட்டிகள் வனப்பகுதி சாலையில் வனவிலங்குகளை தொந்தரவு செய்யாமல் செல்ல வேண்டும்' என்று அறிவுறுத்தியுள்ளனர்


Next Story