தாளவாடி அருகே சாலையில் தேங்கிய மணலால் வாகன ஓட்டிகள் அவதி
வாகன ஓட்டிகள் அவதி
ஈரோடு
தாளவாடி பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அங்குள்ள ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குளம் குட்டைகள் நிரம்பி வழிகின்றன. தொடர் மழை காரணமாக விவசாய நிலங்களில் தண்ணீர்் தேங்கி நிற்பதால் பயிர்கள் அழுகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் வனச்சாலை நெய்தாளபுரம் அருகே காட்டாற்று வெள்ளம் சாலையை மூழ்கடித்து சென்றது. தற்போது வெள்ளம் வடிந்த பிறகு சாலையில் மணல் குவியல் குவியலாக சேர்ந்துவிட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுகிறார்கள். எனவே சாலையில் குவிந்துள்ள மணலை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story