தாளவாடி அருகே யானை தாக்கி பூசாரி சாவுவிறகு பொறுக்க சென்றபோது பரிதாபம்


தாளவாடி அருகே யானை தாக்கி பூசாரி சாவுவிறகு பொறுக்க சென்றபோது பரிதாபம்
x

விறகு பொறுக்க சென்றபோது பரிதாபம்

ஈரோடு

தாளவாடி அருகே விறகு பொறுக்க சென்றபோது யானை தாக்கியதில் பூசாரி பரிதாபமாக இறந்தார்.

பூசாரி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட பாலாப்படுக்கை கிராமத்தை சேர்ந்தவர் மாதேவன் (வயது 43). கோவில் பூசாரி. இவர் நேற்று முன்தினம் மாலையில் வனப்பகுதியையொட்டி உள்ள பகுதியில் விறகு பொறுக்க சென்று உள்ளார். அப்போது வனப்பகுதியை விட்டு காட்டு யானை ஒன்று வெளியேறி உள்ளது. யானையை விறகு பொறுக்கிக் கொண்டிருந்த மாதேவன் கவனிக்கவில்லை என கூறப்படுகிறது.

தூக்கி வீசியது

இதில் அவர் அருகில் வந்த காட்டு யானை உடனே மாதேவனை துதிக்கையால் தூக்கி வீசியது.  இதில் அவர் படுகாயம் அடைந்து கீழே விழுந்தார். பின்னர் சிறிது நேரத்தில் யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

இந்த நிைலயில் அந்த வழியாக வனத்துறையினர் ரோந்து சென்று உள்ளனர். அப்போது அங்கு மாதேவன் படுகாயம் அடைந்து முனகி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு வனத்துறையினர் விசாரித்தனர். அப்போது அவர் தன்னை காட்டு யானை ஒன்று துதிக்கையால் பிடித்து தூக்கி வீசியதாக வனத்துறையினரிடம் தெரிவித்தார்.

சாவு

இதையடுத்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வனத்துறையினர் தாளவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாதேவன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். யானை தாக்கி உயிரிழந்த மாதேவன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

யானை தாக்கி பூசாரி மாதேவன் உயிரிழந்த சம்பவம் பாலாப்படுக்கை கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story