தாளவாடி அருகே மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது
சுவர் இடிந்து விழுந்தது
ஈரோடு
தாளவாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று மாலை 4 மணி அளவில் தாளவாடி அருகே உள்ள அளவிகோடிபுரம், நெய்தாளபுரம் ஆகிய பகுதியில் 30 நிமிடம் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் நெய்தாளபுரத்தை சேர்ந்த சின்னசாமி (வயது 60) என்பவரின் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது வீட்டுக்குள் சின்னசாமி அவருடைய மனைவி நாகம்மா ஆகியோர் இருந்தனர். சுவர் மட்டும் இடிந்து விழுந்தது. மேற்கூரை அப்படியே இருந்ததால் அவர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
Related Tags :
Next Story