தட்டார்மடம் அருகே அசனகமிட்டி நிர்வாகிக்கு கொலைமிரட்டல்
தட்டார்மடம் அருகே அசனகமிட்டி நிர்வாகிக்கு கொலைமிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே உள்ள முதலூர்புதூரை சேர்ந்த சுந்தர்சிங் மகன் லினோ லாசரஸ் (வயது 42). இவர் அங்குள்ள ஆலய அசன கமிட்டி பொருளாளராக உள்ளார். ஆலயத்தில் மாதம் தோறும் ஐக்கிய விருந்து மற்றும் ஜெபக்கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் அதே ஊரைச் சேர்த்த சாமுவேல் மகன் பட்டுராஜ்(33) மது அருந்தி வந்து பிரச்சினை செய்து வந்துள்ளார். இதனை லினோலாசரஸ் கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த லினோலாசரஸை, பட்டுராஜ் வழிமறித்து அவரை அவதூறாக பேசி கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்
இது குறித்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜர் பிள்ளை வழக்கு பதிவு செய்து பட்டுராஜை கைது செய்தார்.
Related Tags :
Next Story