தட்டார்மடம் அருகே வீடு புகுந்து 7 பவுன் நகை திருட்டு
தட்டார்மடம் அருகே வீடு புகுந்து 7 பவுன் நகை திருடப்பட்டது.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே உள்ள கலியன்விளை கிராமத்தை சேர்ந்த சடையன் மகன் முருகன் (வயது 53). இவர் கடந்த 7-ந்தேதி குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். நேற்று மதியம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டு கதவில் உள்ள பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
மேலும், வீட்டுக்குள் பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 7 பவுன் நகைகள் மற்றும் ரூ.3 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது.
இதன் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். குடும்பத்தினர் வெளியூர் சென்றிருப்பதை அறிந்து மர்ம நபர் முருகன் வீட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குருஸ் மைக்கேல் வழக்கு பதிவு செய்து, வீடு புகுந்து 7 பவுன் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபரை தேடிவருகிறார்.
Related Tags :
Next Story