தட்டார்மடம் அருகேகோவில் நிர்வாகியை தாக்கியவர் கைது
தட்டார்மடம் அருகே கோவில் நிர்வாகியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே உள்ள வைரவம்புதுக்குடி நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 67). இவர் அங்குள்ள சுடலைமாடசுவாமி கோவில் நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த சுடலைமாடன் என்பவர், சுடலைமாடன் கோவில் மின் இணைப்பிலிருந்து, அவரது வீட்டிற்கு மின்சாரம் எடுத்து பயன்படுத்தியுள்ளார். இதை அறிந்த ராஜபாண்டி அவரை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று ராஜபாண்டி வீடு அருகில் நின்று கொண்டிருந்துள்ளார். அங்கு வந்த சுடலைமுத்து அண்ணன் மந்திரம் மகன் மாலை என்ற முத்துமாலை, ராஜபாண்டியை அவதூறாக பேசி சரமாரியாக அடித்து உதைத்து கொலைமிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடிவிட்டாராம். இதில் காயமடைந்த ராஜபாண்டி சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுகரசு வழக்குப்பதிவு செய்து முத்துமாலையை கைது செய்தார்.