தட்டார்மடம் அருகேஇளம்பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்த வியாபாரி கைது


தினத்தந்தி 21 Oct 2023 12:15 AM IST (Updated: 21 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தட்டார்மடம் அருகே இளம்பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகேயுள்ள மணி நகர் ராமசாமிபுரத்தை சேர்ந்த நீலகண்டன் மகன் வெற்றிகுமார் (வயது 40). வியாபாரி. இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். தற்போது தசரா திருவிழாவுக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அந்த பகுதியிலுள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து, அங்கு தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குரூஸ் மைக்கேல் வழக்குப்பதிவு செய்து வெற்றி குமாரை கைது செய்தார்.


Next Story