தட்டார்மடம் அருகேகிராம மக்கள் திடீர் சாலைமறியல்
தட்டார்மடம் அருகே கிராம மக்கள் திடீர் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே உள்ள முதலூர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் பாலசிங் (வயது 69). நாட்டு வைத்தியரான இவர் நேற்று முன்தினம் மொபெட்டில் ெசன்றபோது, மினிபஸ் மோதி பலியானார். இந்நிலையில் அவரது குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி அவரது மகள் கிங்ஸிலி தலைமையில் கிராம மக்கள் நேற்று முதலூர் - தட்டார்மடம் சாலையில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்த சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் மற்றும் அலுவலர்கள் மறியலில் ஈடுப்பட்டிருந்த கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் வைத்தியர் குடும்பத்துக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், விபத்து குறித்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரம் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.