தேனி அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது


தேனி அருகே  ஆட்டோவில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது
x

தேனி அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்

தேனி

தேனி அருகே அரண்மனைப்புதூர்-கொடுவிலார்பட்டி சாலையில் தனியார் கல்லூரி அருகே தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவில் சோதனை செய்த போது அதில் 2 கிலோ கஞ்சா இருந்தது.

விசாரணையில் ஆட்டோவில் வந்தவர்கள் தேனி பழைய அரசு மருத்துவமனை சாலையை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (வயது 23), வீருசின்னம்மாள்புரம் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த துருவா என்ற துருவமகரிஷி (19) என்பது தெரியவந்தது. அதை அவர்கள் விற்பனைக்காக கடத்திச் சென்றதும், அதில் கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்த ஜெயசூர்யா என்பவருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்தது.

இதையடுத்து கஞ்சா, ஆட்டோ ஆகியவற்றை கைப்பற்றி, பிடிபட்ட 2 பேரையும் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்கி, துருவா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். ஜெயசூர்யா மீதும் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story