தேனி அருகேதோட்டக்கலை கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி
தேனி அருகே தோட்டக்கலை கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் ரம்யா, ரித்திகா, சத்யா, சங்கவி, ஷாலினி, சதீஷ்வரி, செல்வராஜ் கீதாஞ்சலி, சரிதாகுமாரி, ஷோபிகா ஆகியோர் கொண்ட குழுவினர் தேனி வட்டாரத்தில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் தங்கி, பணி அனுபவ பயிற்சி பெற்று வருகின்றனர். அத்துடன் விவசாயிகளுக்கு இயற்கை முறையில் பயிர் சாகுபடி, பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் குறித்து செயல்விளக்க பயிற்சி அளித்து வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக, தேனி அருகே கோட்டைப்பட்டி கிராமத்தில், பங்கேற்பு ஊரக திறனாய்வு யுக்திகளின் மூலம், அக்கிராமத்தின் ஊரக கட்டமைப்பு, வளங்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் குறைகளை பற்றிய தகவல்களை வரைபடங்களாக வரைந்து ஆவணப்படுத்தினர். இதற்காக கிராமத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன் வரைபடங்கள் வரையப்பட்டன. இதில் மக்கள் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.