திருக்கோவிலூர் அருகே அண்ணனை மண்எண்ணெய் ஊற்றி கொல்ல முயற்சி தம்பி கைது


திருக்கோவிலூர் அருகே  அண்ணனை மண்எண்ணெய் ஊற்றி கொல்ல முயற்சி  தம்பி கைது
x
தினத்தந்தி 7 Dec 2022 12:15 AM IST (Updated: 7 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே அண்ணனை மண்எண்ணெய் ஊற்றி கொல்ல முயன்ற தம்பி கைது செய்யப்பட்டாா்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூரைச் சேர்ந்தவர் பலராமன் மகன்கள் இளங்கோவன்(வயது 54), நந்தகோபால்(48). இவர்களின் குடும்பத்துக்கு சொந்தமான வீட்டுமனை ஒன்று விளந்தை கிராமத்தில் உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று விளந்தை கிராமத்தில் உள்ள இடத்தில், இளங்கோவன் கொட்டகை அமைத்து தங்கியதாக தெரிகிறது. அப்போது அங்கு சென்ற நந்தகோபால், அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நந்தகோபால் அருகில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து இளங்கோவன் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொளுத்தினார்.

இதில் தீக்காயமடைந்த அவர் வலியால் அலறித்துடித்தார். இந்த சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இளங்கோவனை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து நந்தகோபாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story