திருக்கோவிலூர் அருகே காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்


திருக்கோவிலூர் அருகே  காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 27 March 2023 6:45 PM GMT (Updated: 27 March 2023 6:47 PM GMT)

திருக்கோவிலூர் அருகே காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தாிசனம் செய்தனா்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள ஆதிச்சனூர் கிராமத்தில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் விக்னேஸ்வரபூஜை, கணபதிஹோமத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தனபூஜை, சாந்திஹோமம், வாஸ்து சாந்தி, முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் நேற்று காலையில் 2-ம் கால யாகசாலை பூஜை, நாடிசந்தானம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. இதையடுத்து யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசம் ஊர்வலகமாக எடுத்து செல்லப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் ஆதிச்சனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், உபயதாரர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story