தூத்துக்குடி அருகே லாரி டிரைவர் வெட்டிக் கொலை


தூத்துக்குடி அருகே   லாரி டிரைவர் வெட்டிக் கொலை
x

தூத்துக்குடி அருகே லாரி டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி அருகே லாரி டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

லாரி டிரைவர்

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள பேரூரணி வடக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 36), லாரி டிரைவர். இவருடைய மனைவி கனகலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார். நேற்று முன்தினம் இரவு கருப்பசாமி வீட்டின் முன்பகுதியில் உள்ள திண்ணையில் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தார்.

நள்ளிரவில் தொடர்ந்து நாய்கள் குரைத்துக்கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கனகலட்சுமி கண்விழித்து பார்த்தார். அப்போது வீட்டின் முன்பக்க தகர கதவு திறந்து கிடந்தது. அதே நேரத்தில் திண்ணையில் படுத்து இருந்த கருப்பசாமியை காணவில்லை.

பிணமாக கிடந்தார்

இதனால் கனகலட்சுமி சிறிது நேரம் காத்திருந்தாா். ஆனால் கருப்பசாமி வராததால் அவருடைய செல்போனை தொடர்பு கொண்டார். ஆனால் கிடைக்கவில்லை. இதனால் கனகலட்சுமி வீட்டின் வெளியே சென்று பார்த்தார். அப்போது, சிறிது தூரத்தில் கருப்பசாமி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக தட்டப்பாறை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கருப்பசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வெட்டிக் கொலை

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, நள்ளிரவு திண்ணையில் படுத்து இருந்த கருப்பசாமியை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது ெதரியவந்தது. எனினும் கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து போலீசார் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து தட்டப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

தூத்துக்குடி அருகே லாரி டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story