திருச்செந்தூர் அருகே தோட்டத்தில் 55 ஆடுகள் திருட்டு
திருச்செந்தூர் அருகே தோட்டத்தில் 55 ஆடுகள் திருட்டப்பட்டது.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கீழப்புதுத்தெருவை சேர்ந்த பிச்சமணி மகன் பாலாஜி (வயது 27). இவர் திருச்செந்தூர் அருகே நடுநாலு மூலைக்கிணற்றிலிருந்து காயாமொழி செல்லும் ரோட்டில் தோட்டம் வைத்துள்ளார். அந்த தோட்டத்தில் ஆடு, மாடு, கோழிகள் வளர்த்து வருகிறார். தோட்டத்தை அதே பகுதியை சேர்ந்த ராமர் என்பவர் பராமரித்து வருகிறார். இவர், கடந்த 25-ந் தேதி இரவு ஆடு, மாடுகளுக்கு தீவனம் வைத்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் காலையில் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது 55 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 20 ஆயிரமாகும். பாலாஜி கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடுகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story