திருச்செந்தூர் அருகே கடலுக்கு சென்ற மீனவர் திடீர் சாவு
திருச்செந்தூர் அருகே கடலுக்கு சென்ற மீனவர் திடீரென இறந்து போனார்.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை தெற்கு தெருவை சேர்ந்தவர் ரொபின்ஸ்டன் (50). இவர், தனக்கு சொந்தமான படகில் மகன் ராஜா (21) மற்றும் ரூபின்ஸ்டன் பீரீஸ் ஆகியோர் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். பின்னர் மாலையில் திரும்பும் போது போது சுமார் 2 கடல் மைல் தூரத்தில் ரொபின்ஸ்டனுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு படகில் மயங்கி விழுந்தார். உடனே பைபர் படகை கரைக்கு வேகமாக கொண்டு வந்து, அவரை திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருச்செந்தூர் கடலோர பாதுகாப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story