திருச்செந்தூர் அருகேசிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு ஆயுள் தண்டனை:தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு
திருச்செந்தூர் அருகே சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு கூறப்பட்டது.
திருச்செந்தூர் அருகே சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
போக்சோ வழக்கு
திருச்செந்தூர் அருகே உள்ள இடைச்சிவிளையைச் சேர்ந்தவர் அய்யாதுரை. இவரது மகன் வேலாண்டி (வயது 50). இவர் கடந்த 2021-ம் ஆண்டு 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கை அப்போதைய திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா புலன் விசாரணை செய்து கடந்த 26.4.2021 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், குற்றம் சாட்டப்பட்ட வேலாண்டிக்கு எஞ்சிய ஆயுள் காலம் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் முத்துலட்சுமி ஆஜரானார்.