திருச்செந்தூர் அருகே தொழிலாளி வீ்ட்டில் 5½ பவுன் நகை திருட்டு
திருச்செந்தூர் அருகே தொழிலாளி வீ்ட்டில் 5½ பவுன் நகை திருடப்பட்டது.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி முந்தரி தோட்டத்தை சேர்ந்த சுயம்புலிங்கம் மகன் முத்துகுமார் (வயது 48). தொழிலாளி. இவரது மனைவி மக்கள் நல பணியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 14-ந் தேதி காலையில் வீட்டை பூட்டி விட்டு கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் வீடு திரும்பிய போது, மர்மநபர் சாவி போட்டு கதவை திறந்து பீரோவிலிருந்த தங்கசங்கிலி, மோதிரம், உள்ளிட்ட 5½ பவுன் தங்க நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சோனியா வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story