டி.என்.பாளையம் அருகே லாரி மோதி 2 மாணவிகள் படுகாயம்


டி.என்.பாளையம் அருகே  லாரி மோதி 2 மாணவிகள் படுகாயம்
x

டி.என்.பாளையம் அருகே லாரி மோதி பள்ளிக்கூட மாணவிகள் 2 பேர் படுகாயம் அடைந்தனர். மதுபோதையில் லாரி ஓட்டிய டிரைவரை பிடித்து மாணவர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

ஈரோடு

டி.என்.பாளையம்

டி.என்.பாளையம் அருகே லாரி மோதி பள்ளிக்கூட மாணவிகள் 2 பேர் படுகாயம் அடைந்தனர். மதுபோதையில் லாரி ஓட்டிய டிரைவரை பிடித்து மாணவர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

2 மாணவிகள் படுகாயம்

டி.என்.பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடம் அருகே நேற்று மாலை 5.30 மணி அளவில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் மீது மோதாமல் இருக்க லாரியை டிரைவர் வலதுபுறமாக திரும்பியுள்ளார்.

இதில் எதிர்பாராதவிதமாக லாரி எதிரே பள்ளிக்கூடம் முடிந்து நடந்து வந்து ெகாண்டிருந்த மாணவ-மாணவிகள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதனால் மாணவ-மாணவிகள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த விபத்தில் பிளஸ்-2 மாணவிகள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

லாரி டிரைவர் பிடிபட்டார்

மோதிய வேகத்தில் லாரி ரோட்டோரம் இருந்த தடுப்பு கல்லை உடைத்து கொண்டு மரத்தின் மீது மோதி நின்றது. விபத்து நடந்ததும் டிரைவர் லாரியுடன் அங்கிருந்து தப்பித்து செல்ல முயன்றார். உடனே அங்கிருந்த மாணவர்கள் டிரைவரை பிடித்து பங்களாப்புதூர் போலீசில் ஒப்படைத்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த 2 மாணவிகளையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் 2பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

வழக்குப்பதிவு

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், லாரி டிரைவர் அத்தாணி மூங்கில்பட்டி பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 28) என்பதும், இவர் மதுபோதையில் சத்தியமங்கலத்தில் இருந்து அத்தாணி நோக்கி லாரியை ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது.

இதுகுறித்து லாரி டிரைவர் கண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story