டி.என்.பாளையம் அருகேலாரியில் கருங்கற்கள் கடத்த முயற்சிதப்பி சென்ற மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
டி.என்.பாளையம் அருகே லாரியில் கருங்கற்கள் கடத்த முயன்றவா்களை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.
டி.என்.பாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்திலும், அதனையொட்டிய அரசு புறம்போக்கு நிலத்திலும் இருந்த பெரிய அளவிலான பாறைகளை கருங்கற்களாக உடைத்து லாரிகளில் கடத்துவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வாணிப்புத்தூர் நிலவருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர்.
அப்போது அங்குள்ள தனியார் விவசாய நிலத்திலும் அதனை ஒட்டியுள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்திலும் இருந்த பெரிய அளவிலான பாறைகளை கருங்கற்களாக உடைத்து மினி டிப்பர் லாரியில் சிலர் ஏற்றி கொண்டிருந்தனர்.
உடனே வாணிப்புத்தூர் நிலவருவாய் ஆய்வாளர் சக்திவேல், கிராம நிர்வாக அலுவலர் உமா மகேஸ்வரி மற்றும் உதவியாளர் ஆகியோர் கற்களை கடத்த முயன்றவர்களை கையும் களவுமாக பிடித்தனர். அப்போது டிரைவர் மற்றும் சிலர் நைசாக லாரியில் ஏறி அங்கிருந்து மாற்றுப்பாதை ஒன்றின் வழியாக வேகமாக ஓட்டி தப்பி சென்றனர். ேமலும் லாரியில் இருந்த கற்களை நிலத்தின் கீழே கொட்டினார்கள். இதுகுறித்து அதிகாரிகள் பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் கருங்கற்களை கடத்தி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.