தூத்துக்குடி அருகேமது குடித்த போது தகராறு; 2 பேர் காயம்
தூத்துக்குடி அருகே மது குடித்த போது ஏற்பட்ட தகராறில் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் நவமணி தெருவை சேர்ந்தவர் நிக்கோலஸ் அன்ஷோ (வயது 28). மீனவர். இவரும், தருவைகுளம் ரிச்சர்டு தெருவை சேர்ந்த நிக்கோலஸ் (45) என்பவரும், அந்த பகுதியில் உள்ள கோவில் அருகே வைத்து மது குடித்துக் கொண்டு இருந்தார்களாம். அப்போது, அதே பகுதியை சேர்ந்த நிக்கோலஸ் டெனிஸ்டன் (40), மில்லன் (25) உள்ளிட்ட 4 பேர் அதே பகுதியில் மதுகுடித்துக் கொண்டு இருந்தார்களாம். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த நிக்கோலஸ் டெனிஸ்டன், மில்லன் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து, அங்கு கிடந்த கல்லால் நிக்கோலஸ் அன்ஷோ, நிக்கோலஸ் ஆகியோரை தாக்கினார்களாம். இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் தருவைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.