தூத்துக்குடி அருகே பூ வியாபாரி குடும்பத்தினர் மீது தாக்குதல்


தினத்தந்தி 26 Oct 2022 12:15 AM IST (Updated: 26 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே பூ வியாபாரி குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்திய 20 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சிவா. இவரது மகன் பேச்சிமுத்து (வயது22). பூ வியாபாரி. பூக்கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவருடைய அத்தை சக்தியின் மகன் மணிகண்டனிடம் சிலர் தகராறு செய்துள்ளனர். இதனை பேச்சிமுத்துவின் சகோதரர் பழவேசம் தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் பேச்சிமுத்துவின் வீட்டிற்கு சென்று பழவேசத்தை வெளியே வரும்படி கூறியுள்ளனர். சத்தம் கேட்டு வெளியே வந்த பேச்சிமுத்து, அவருடைய அப்பா சிவா, அம்மா பிரம்மசக்தி, அண்ணன் அஜித்குமார் ஆகியோரை அரிவாளால் வெட்டியும், கம்பு, கற்களால் தாக்கி உள்ளனர். இதில் காயம் அடைந்த பேச்சிமுத்து உள்ளிட்ட 4பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட டேவிட், முத்துராஜ், கிறிஸ்டோபர், உள்பட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.


Next Story