தூத்துக்குடி அருகே கடலில் தவறி விழுந்த மீனவர் சாவு


தூத்துக்குடி அருகே  கடலில் தவறி விழுந்த மீனவர் சாவு
x
தினத்தந்தி 1 Dec 2022 12:15 AM IST (Updated: 1 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே கடலில் தவறி விழுந்த மீனவர் பரிதாபமாக இறந்து போனார்.

தூத்துக்குடி

ராமேசுவரம் சங்குமால் காலனியை சேர்ந்தவர் பாபு (வயது 54). மீனவர். இவர் தருவைகுளத்தில் இருந்து நேற்று காலையில் 15 மீனவர்களுடன் படகில் கடலுக்குள் மீன்பிடி தொழிலுக்கு சென்றாராம். சுமார் 6 கடல்மைல் தொலைவில் படகிலிருந்து கனவாய் மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது நிலைதடுமாறி கடலுக்குள் தவறி விழுந்துள்ளார். உடனடியாக சக மீனவர்கள் பாபுவை மீட்டு தருவைகுளத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story