தூத்துக்குடி அருகே வீடு புகுந்து நகை, பொருட்கள் திருட்டு
தூத்துக்குடி அருகே வீடு புகுந்து நகை, பொருட்கள் திருடிய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகே உள்ளமுத்தையாபுரம் தங்கமணி நகர் முதல் தெருவைச் சேர்ந்த தில்லையாண்டி மகன் இசக்கிமுத்து (வயது36). இவரது மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 7-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு, மதுரையிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இசக்கிமுத்து உடன் இருந்து கவனித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் முன்பக்க கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் உள்ளே இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு தங்க கம்மல், மோதிரம், வெள்ளி பொருட்கள் மற்றும் டி.வி. திருட்டு இருந்தது. இசக்கிமுத்து குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருப்பதை அறிந்த மர்ம நபர் வீட்டை உடைத்து நகைகள், பொருட்களை திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.