தூத்துக்குடி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி வடமாநில தொழிலாளி சாவு


தூத்துக்குடி அருகே  தண்ணீர் தொட்டியில் மூழ்கி   வடமாநில தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி வடமாநில தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.

தூத்துக்குடி

மத்திய பிரதேசம் மாநிலம் ரோகானியா பகுதியை சேர்ந்தவர் அஜ்ஜோ சவுத்ரி (வயது 23). இவர் தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை சிறுபாடு பகுதியில் தங்கி இருந்து, அந்த பகுதியில் உள்ள தனியார் ஐஸ் கம்பெனியில் கூலி வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று மாலையில் ஐஸ் கம்பெனியில் உள்ள மோட்டாரை தூக்கிய போது, எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாததால், தண்ணீரில் மூழ்கிய அஜ்ஜோ சவுத்ரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story