தூத்துக்குடி அருகே சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்


தூத்துக்குடி அருகே  சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதனால் முத்தையாபுரம், பாரதிநகர், அத்திமரப்பட்டி, அனல்மின்நகர் பகுதி, கேம்ப்-1, கேம்ப்-2, துறைமுகம் மற்றும் துறைமுக குடியிருப்பு பகுதிகள், தோப்புத்தெரு, வடக்கு தெரு, முள்ளக்காடு, பொட்டல்காடு, அபிராமிநகர், சுனாமிநகர், சவேரியார்புரம், கால்டுவெல்காலனி ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

இந்த தகவலை முத்தையாபுரம் துணை மின்நிலைய செயற்பொறியாளர் சாமுவேல் சுந்தர்ராஜ் தெரிவித்து உள்ளார்.


Next Story