தூத்துக்குடி அருகேபொங்கல் விழா விளையாட்டு போட்டிகள்


தூத்துக்குடி அருகேபொங்கல் விழா விளையாட்டு போட்டிகள்
x
தினத்தந்தி 18 Jan 2023 12:15 AM IST (Updated: 18 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி நகர் மற்றும் தெற்கு வீரபாண்டியபுரம், காயலூரணி, புதூர்பாண்டியாபுரம், சங்கரப்பேரி, மீளவிட்டான், தளவாய்புரம், அய்யனடைப்பு, வீரநாயக்கன்தட்டு, சாமிநத்தம், நடுவக்குறிச்சி, ராஜாவின் கோவில், நயினார்புரம் உள்ளிட்ட கிராமங்களில் பொங்கல் விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஓட்டப்பந்தயம், கயிறு இழுத்தல், இசை நாற்காலி, பானை உடைத்தல், சிறுவர்களுக்கு பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், தவளை ஓட்டம், ஸ்கிப்பிங் சாக்கு ஓட்டம், மெது சைக்கிள் ஓட்டம், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற பல போட்டிகள் நடத்தப்பட்டன. பெண்களுக்கான கோலப்போட்டிகள் நடத்தப்பட்டன. கோலப்போட்டியில் பங்கேற்ற பெண்கள் தாங்கள் வரைந்த கோலத்தின் முன்பு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்றும் வாசகங்களை எழுதி இருந்தனர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் நடந்தது. விழாவில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சமுதாய வளர்ச்சி பிரிவு மேலாளர் சுந்தர்ராஜ், செய்தி தொடர்பு பிரிவு தலைவர் மீரா ஹரிதாஸ், உற்பத்தி பிரிவு மேலாளர் மாரியப்பன், சங்கரநாராயணன், ரமேஷ் கணேஷ், ஸ்டெர்லைட் சமுதாய வளர்ச்சி பிரிவு அலுவலர்கள் பொன்ராஜ், பாலநாராயணன், முருகராஜ், அஞ்சிதா, ராகவி உள்ளிட்டவர்கள் கிராமம், கிராமமாக சென்று விழாக்களில் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து பரிசுகளையும் வழங்கினர். நிகழ்ச்சியில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஊர்த்தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு கிராமங்களிலும் இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை அந்தந்த பகுதி இளைஞர் அணியினர் செய்து இருந்தனர்.


Next Story