தூத்துக்குடி அருகேசாரண, சாரணிய இயக்க ஆளுநர் விருது தேர்வு முகாம்
தூத்துக்குடி அருகே சாரண, சாரணிய இயக்க ஆளுநர் விருது தேர்வு முகாம் நடந்தது.
தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டையில் சாரண, சாரணிய இயக்க ஆளுநர் விருது தேர்வு முகாம் நடந்தது. இதில் 410 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
தேர்வு முகாம்
தூத்துக்குடி மாவட்ட பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் சார்பில் ஆளுநர் விருது (ராஜ்ஜிய புரஷ்கார்) தேர்வு முகாம் தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை பி.எஸ்.பி மேல்நிலைப் பள்ளியில் 3 நாட்கள் நடந்தது. முகாமில் தூத்துக்குடி, திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளில் இருந்தும் சுமார் 250 சாரணர்கள், 160 சாரணியர்கள் என ெமாத்தம் 410 மாணவ, மாணவியரும், 25 பொறுப்பாசிரியர்களும் கலந்து கொண்டனர்.
சிறந்த சாரண, சாரணியர் ேதர்வு
முகாமை மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) பிரபாகுமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
பின்னர் சாரண, சாரணியர்களுக்கு பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் இறைவணக்கம், கொடிப்பாடல், உறுதிமொழி, தேசியகீதம், மதிப்பிடுதல், முதலுதவி, நட்சத்திர குறியீடுகள், திசையறிதல், கூடாரம் அமைத்தல், சாரண, சாரணிய கொடியேற்றும் முறை, மரபுக்குறியீடுகள் ஆகியவற்றில் செய்முறைத் தேர்வும், எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டது. மாநில பயிற்சியாளர்கள் எபனேசர் சந்திரஹாசன், மு.நாராயணன், ராஜசேகர், மகேசுவரி, ஆ.ஜெயாசண்முகம் ஆகியோர் தேர்வாளர்களாக கலந்து கொண்டு சிறந்த சாரண, சாரணியர்களை தேர்வு செய்தனர்.
கலந்து கொண்டவர்கள்
முகாமில் தூத்துக்குடி மாவட்ட பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் செ.எட்வர்ட் ஜாண்சன் பால், மாவட்ட ஆணையர்கள் பி.ஜெயசுசிலா, பி.சரவணன், மாவட்ட அமைப்பு ஆணையர்கள் டி.ஆல்பர்ட் தினேஷ் சாமுவேல், என்.வள்ளியம்மாள், பொறுப்பாசிரியர்கள் ஜான் சவுந்திரராஜ், ஆறுமுகம், சகாயமேரிவீனஸ், அந்தோணி ஜோஸ்பின் மேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.