தூத்துக்குடி அருகேபொறியாளர் திடீர் சாவு


தூத்துக்குடி அருகேபொறியாளர் திடீர் சாவு
x
தினத்தந்தி 14 Feb 2023 12:15 AM IST (Updated: 14 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே பொறியாளர் திடீரென இறந்து போனார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி

ஸ்பிக் நகர்:

தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜோதி முத்து. இவரது மகன் தெய்வேந்திர விஜயகுமார் (வயது 43). பொறியாளயாளரான இவர், நிலத்தை அளவீடு செய்வது, கட்டிட வரைபடம் போட்டு கொடுப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தார். இவர் முள்ளக்காடு மகாலட்சுமி நகரில் குடியிருக்கும் ராஜ்குமார் என்பவரது நிலத்தை நில அளவை செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, முள்ளக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும்வழியில் இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சேட்டைநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story