தூத்துக்குடி அருகேகஞ்சா விற்ற வாலிபர் கைது
தூத்துக்குடி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி
புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராமலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, புதுக்கோட்டை பாலம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த புதுக்கோட்டை வேதகோவில் தெருவை சேர்ந்த ஜெபஸ் பாலன் மகன் ஜெபின் ஆண்ட்ரேவ்ஸ் (வயது 22) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அப்பகுதியில் கஞ்சா விற்றது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஜெபின் ஆண்ட்ரேவ்ஸ் மீது ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டம் சிப்காட் போலீஸ் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story