தூத்துக்குடி அருகேவிசைப்படகு மூழ்கியது


தூத்துக்குடி அருகேவிசைப்படகு மூழ்கியது
x
தினத்தந்தி 24 Feb 2023 12:15 AM IST (Updated: 24 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே விசைப்படகு மூழ்கியது. அதில் இருந்த மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே வேம்பார் பகுதியில் இருந்து ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். அந்த பகுதியில் இருந்து 5 மீனவர்கள் ஒரு விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர். படகு சுமார் ஒரு கடல் மைல் தொலைவில் சென்ற போது, திடீரென படகில் ஓட்டை விழுந்தது. இதனால் படகில் இருந்த மீனவர்கள், அருகில் வந்த மற்றொரு படகில் ஏறி கரைக்கு திரும்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story