தூத்துக்குடி அருகேகல்லூரி மாணவர்களுக்கு யோகா பயிற்சி
தூத்துக்குடி அருகே கல்லூரி மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி வாகைக்குளம் மதர்தெரசா பொறியியல் கல்லூரியில், முதலாண்டு மாணவர்களிடையே யோகா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ஒருமித்த மனநிலை, கல்வியில் கவனம், சிறந்த உடற்பயிற்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி இயக்குநர் ஜார்ஜ் கிளிங்டன், முதல்வர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். சர்வதேச யோகா நடுவர் மற்றும் பயிற்சியாளர்கள் சுந்தரவடிவேல், தனலட்சுமி, கனிஸ்கா ஆகியோர் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர். முதலில் தரையில் அமரவைக்கப்பட்ட மாணவர்களுக்கு மூச்சு பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் உடல் ஆரோக்கியம், நல்ல மனநிலைக்கான யோகாசன பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதனையடுத்து யோகாசனம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாக மேலாளர் விக்னேஷ் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.