தூத்துக்குடி அருகே2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
தூத்துக்குடி அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயமானார்.
தூத்துக்குடி
புதுக்கோட்டை அருகே உள்ள மேலகூட்டுடன்காடு அல்லிகுளத்தை சேர்ந்தவர் தாமஸ். இவருடைய மனைவி சுதாமதி (வயது 30). இவர்களுக்கு தாரணிகா (8) என்ற மகளும், சுமித் (6) என்ற மகனும் உள்ளனர். சம்பவத்தன்று சுதாமதி தனது மகள், மகனுடன் ஆட்டோவில் ஏறி வெளியில் சென்றாராம். மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காணாமல் போனவர்கள் குறித்த தகவல் அறிந்தவர்கள், சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டரை 94981 77743, 0461-2341472 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story